ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரஸ்!

16 March 2020 அரசியல்
spainpmwife.jpg

கனடா பிரமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவியினைத் தொடர்ந்து, தற்பொழுது ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சாஞ்சியின் மனைவிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சாஞ்சியின் மனைவி, பெகோனா கோமஸூக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை அந்நாட்டு பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அவருக்கு எப்படிப் பரவியது என தற்பொழுது வரை தெரியவில்லை. இதனால், அவர் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். அவரைத் தொடர்ந்து. அந்நாட்டு பிரதருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. ஸ்பெயின் நாட்டில் தற்பொழுது வரை 6,500 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில், 500 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 196 பேர் இந்த வைரஸ் தொற்றால், மரணமடைந்தனர்.

இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், அடுத்த 15 நாட்களுக்கு, அவசரநிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. வெளியில் நடமாடக் கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களும் விடுமுறை அறிவித்துள்ளன.

HOT NEWS