கொரோனாவில் இருந்து மீண்டார் எஸ்பிபாலசுப்ரமணியம்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

24 August 2020 சினிமா
spbhealthlatest.jpg

கடுமையானப் போராட்டத்திற்குப் பிறகு, பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம், கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளதாக, அவருடைய மகன் எஸ்பிபி சரண் தெரிவித்து உள்ளார்.

உலகம் முழுக்க கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றினால், பலப் பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவின் மிகப் பிரபலமான முன்னணி பாடகரான எஸ்பிபாலசுப்ரமணியமும், கொரோனா தொற்றால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர், உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக, அவருடைய மகன் எஸ்பிபிசரண் தெரிவித்தார். அவருக்காக, பலரும் தங்களுடைய வீடுகளில், பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்தப் பிரார்த்தனைகளைத் தொடர்ந்து, அவருடைய உடல்நலம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருவதாக, எஸ்பிபிசரண் தெரிவித்து வந்தார். அவருக்கு தற்பொழுது கொரோனா சோதனை செய்யப்பட்டது.

அதில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும், அவருடைய உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும் எஸ்பிபிசரண் தெரிவித்து உள்ளார். இது தற்பொழுது அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும், அவரும் வேகமாக மீண்டு வர வேண்டும் என்று, தங்களுடைய வாழ்த்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS