பிரதமர், குடியரசுத் தலைவருக்கு தனி விமானம் விரைவில்!

09 October 2019 அரசியல்
modi99.jpg

இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவருக்காக, விமானம் வாங்கப்பட உள்ளது.

இந்த விமானத்தினைத் தற்பொழுது, போயிங் நிறுவனம் உருவாக்கி வருகின்றது. இந்த விமானம் வரும் ஜூன் 2020ம் ஆண்டு, இந்தியாவிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மொத்தம் இரண்டு விமானங்கள் வாங்கப்பட உள்ளன.

இதற்கான ஒப்பந்தத்தினை 2011ம் ஆண்டு, போயிங் நிறுவனத்துடன் இந்திய அரசு செய்துள்ளது. இந்த விமானம் போயிங் 777-300ஈஆர் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு வருகின்றது.

இந்த விமானத்தில், அதிநவீன ரேடார் பொருத்தப்பட்டு இருக்கும். எதிரிகளின் ரேடார்களில் சிக்காதபடி பறக்கும் திறன் கொண்டது இந்த விமானம். அதே போல், வெப்பத்தை வைத்தும் இதனைக் கண்டுபிடிக்க இயலாது. மேலும், ஏவுகணைகளிடம் இருந்து, தானாகத் தப்பிக்கும் புதிய தொழில்நுட்பமும் இதில் இணைக்கப்பட்டு இருக்கும். இதனால், பிரதமர் உட்பட, இதில் பயணம் செய்பவர்கள் மிகப் பாதுகாப்பாக பயணம் செய்ய இயலும்.

தற்பொழுது வரை, இந்தியாவின் ஏர் இந்தியா விமானத்திலும், மற்ற விமானங்களிலும் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் உட்பட, பலரும் பயணம் செய்கின்றனர். ஆர்டர் செய்யப்பட்டுள்ள அந்த இரண்டு விமானங்களும், ஏர் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வராமல், இந்திய விமாப்படையின் கட்டுப்பாட்டில் வர உள்ளது என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

REFERENCE

www.hindustantimes.com/india-news/pm-narendra-modi-s-special-aircraft-landing-next-june-may-be-called-air-force-one/story-Y8912NOFJj0toecIgJnFDP.html

HOT NEWS

S