நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை! சுர்ஜித்திற்காக அனைத்து மதத்தினரும் பிரார்த்தனை!

26 October 2019 அரசியல்
nagoredargah.jpg

நேற்று மாலை 5.40 மணியளவில், திருச்சி நடுகாட்டுப்பட்டியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனான சுஜித், தாயின் கண் முன்னயே, குடிநீருக்காக தோண்டியிருந்த குழிக்குள் விழுந்தான். அவனை அவன் தாய் காப்பாற்றுவதற்காக கையை நீட்டும் பொழுது, அவன் மேலும் கீழே பத்து அடி இறங்கிவிட்டான்.

தொடர்ந்து, காவலர்கள் மற்றும் பொதுமக்கள் முயற்சி செய்யும் பொழுது 26அடி சென்றுவிட்டான். இதனால், தீயணைப்புத் துறை, காவல்துறை, மருத்துவத் துறை, மீட்புத்துறை, மற்ற மீட்புக் குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாநில பேரிடர் மீட்புக் குழு என அனைவருமே, சிறுவன் சுர்ஜித்தினைக் காப்பாற்றுவதற்கு போராடி வருகின்றனர்.

நேற்று மாலை முதல் தற்பொழுது வரை, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோரும் தற்பொழுது வரை, அங்கேயே இருந்து நிலைமையை கவனித்து வருகின்றனர். இது குறித்துப் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், சிறுவன் உடலில் அசைவு இல்லை எனக் கவலை தெரிவித்தார்.

இந்நிலையில், சிறுவன் சுர்ஜித் விரைவில் பூரண நலத்துடன் மீட்கப்பட வேண்டும் என, நாகூர் தர்காவில் சிறப்புத் தொழுகை நடைபெற்று வருகின்றது.

நாகப்பட்டினத்தில் உள்ள நாகூர் தர்காவில் மட்டுமின்றி, பலரும் அந்த சிறுவன் மீட்கப்பட வேண்டும் என, பலரும் இறைவழிபாட்டில் ஈடுபட்டுள்ளது தற்பொழுது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HOT NEWS