சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது, ஜெகதீசன் விசாரணை ஆணையம்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதன் 100வது நாள் போராட்டத்தின் பொழுது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பொழுது, பாதிக்கப்பட்டவர்களை, ரஜினிகாந்த் சென்று பார்வையிட்டார். அவரை, பாதிக்கப்பட்ட நபர், யார் நீங்கள் எனக் கேட்டார். அதற்கு, நான் தான் பா ரஜினி வந்திருக்கேன் என்றார். இது சமூக வலைதளங்களில், மாபெரும் கேலிக்குள்ளானது.
இதனிடையே, செய்தியாளர்களை அன்று சந்தித்த ரஜினிகாந்த், எப்பொழுதும் போராட்டம் என்றால், நாடே சுடுகாடு ஆகிவிடும் என்றார். மேலும், சமூக விரோதிகள், இந்தப் போராட்டத்தில் ஊடுறுவியதால் தான், இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இந்த கலவரத்திற்கு, சமூக விரோதிகளே காரணம் எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து, இந்த கலவரம் தொடர்பான, விசாரணையை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் விசாரித்து வருகின்றது.
அந்த ஆணையம், வருகின்ற 25ம் தேதி அன்று, விசாரணை ஆணையத்தில் ரஜினிகாந்த் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கூறியுள்ளது. மேலும், அவருக்கு சம்மனையும் அனுப்பி வைத்துள்ளது.