ரபேல் என்ற பெயருக்கு, காற்றின் விருந்தாளி என்றுப் பொருள். இந்த விமானம் ஒரு போர் விமானம் ஆகும். இதனை பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த விமானத்தில் அப்படி என்ன சிறப்பு உள்ளது என விரிவாகப் பார்ப்போம்.
இந்த ரபேல் விமானத்தினை, போர்கப்பல்களில் இருந்தும், தரைப்படையில் இருந்தும் எளிதாகப் பயன்படுத்த இயலும். ஒரு விமானங்களே, இந்த வசதியினை உடயவை. இந்த விமானத்தில் பெரிய ரக ஆயுதங்களைக் கூட, சர்வ சாதாரணமாக எடுத்துச் செல்ல இயலும். இதுவரை இப்படியொரு விமானத்தினை, பெரிய நாடுகள் பெருமளவில் தயாரித்தது இல்லை. சிறிய ரக அணுகுண்டுகள் முதல் பெரிய ரக ஏவுகணைகள் வரை, இதில் சுமந்து சென்று எதிரிகளை அழிக்க இயலும்.
இந்த போர் விமானமானது, பிரெஞ்சு விமானப்படை, பிரெஞ்சு கடற்படை, எகிப்து விமானப்படை, கத்தா விமானப்படையில் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். 2020 கணக்கின் படி, மொத்தம் 210 முதல் 215 விமானங்களே இதுவரை தயாரிக்கப்பட்டு உள்ளன. ரபேல் விமானத்தில் பலதரப்பட்ட பிரிவுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும், விலைக்கு ஏற்றாற் போல பல வசதிகளைக் கொண்டிருக்கும்.
இரண்டு என்ஜின்களைக் கொண்ட இந்த விமானம், பறக்கும் பொழுது எரிபொருளை நிரப்பிக் கொள்ளும் ஆற்றல் படைத்தது. இதில், 400 லிட்டர் எரிபொருளை தேக்கும் திறன் உள்ளது. இந்த விமானத்தில் ஒன்பது டன் எடையுள்ள ஆயுதங்களை பயன்படுத்த இயலும். இதில், மைக்கா, மேஜிக், சைட்விண்டர், அஸ்ராம், அம்ராம், அப்பாச்சே, எஸ்30எல், ஏஎல்ஏஆர்எம், ஹெச்ஏஆர்எம், மேவ்ரிக், பிஜிஎம் 100 ஏர்-டூ-க்ரவுண்ட் ஏவுகணைகளைப் பயன்படுத்த இயலும்.
அதே போல், ஏஎம்39, பெங்குயின் 3 மற்றும் ஹர்பூன் ரக கப்பல்களைத் தாக்கும் ஏவுகணைகளையும் பயன்படுத்த இயலும். இதில் ஏர்-டூ-ஏர் ஏவுகணைகள் தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒரே நேரத்தில் ஆறு ஏஏஎஸ்எம் ஏவுகணைகளை பயன்படுத்தி இயலும். இதன் துல்லியத்தன்மையானது, இலக்கிற்குப் பத்து மீட்டர் ஆகும். அதவாது, குறிவைத்த இடத்தின் பத்து மீட்டருக்குள் இதன் ஆயுதங்கள் தாக்குதல் நடத்தும்.
இதில் இரண்டு துப்பாக்கிகள் இணைக்கப்பட்டு உள்ளன. சுமார், 30எம்எம் கேனான் DEFA 791B கேனான் ரகத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் துப்பாக்கிகளைக் கொண்டு, ஒரு நிமிடத்தில் 2500 முறை சுட இயலும். இதில், லேசர் தொழில்நுட்பம் உள்ளதால், இலக்கினை எளிதாக குறிவைத்து அழிக்க இயலும். இந்த விமானமானது, பல தடுப்பு வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டு உள்ளது.
இந்த விமானத்தில் உள்ள வசதிகளின் காரணமாக, எதிரிகளை குழப்பி எளிதாகப் பறக்க இயலும். எதிரிகள் தாக்குதல் நடத்தப் போவதை முன்கூட்டிய கணிக்கும் சக்தி, ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கை, வெடிகுண்டு ஜாமர்களைக் கண்டுபிடிக்கும் சக்தி உள்ளிட்டவை இந்த விமானத்தின் சிறப்பம்சங்கள் ஆகும். இதில் உள்ள எம்88-2 என்ஜின்கள் இரண்டுமே 75கேஎன் சக்தியினை உருவாக்கும் ஆற்றல் படைத்தவை.
இந்த விமானங்களை மலைப் பிரதேசங்களிலும், தரைக்கு அருகிலும் பயன்படுத்தி, மிக லாவகமாகப் பறக்க இயலும். இந்த விமானத்தினைத் தற்பொழுது இந்தியா வாங்க உள்ளது. இதனை வாங்க, கனடா, பெல்ஜியம், பிரேசில், லிபியா, சிங்கப்பூர், வடகொரியா, உள்ளிட்ட நாடுகள் வாங்க முயற்சித்து தோல்வியடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.