காங்கிரஸ் தலைவர்களுகு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து!

09 November 2019 அரசியல்
rahul.jpg

காங்ரஸ் தலைவர்களுக்கு, இதுவரை வழங்கி வந்த எஸ்பிஜி பாதுகாப்பினை திரும்பப் பெற்றது மத்திய அரசு.

காங்கிரஸ் தலைவர்கள் திருமதி சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு எஸ்பிஜி பிரிவினர் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. அவர்கள், இவர்களுடன் 24 மணி நேரமும் அனைத்து நாட்களும் பாதுகாப்பு வழங்கி வந்தனர். இந்நிலையில், தற்பொழுது எஸ்பிஜி பாதுகாப்பினைத் திரும்பப் பெற்றது மத்திய அரசு.

எஸ்பிஜி பிரிவினருக்குப் பதிலாக, சிஆர்பிஎப் பாதுகாப்பு படையினர் தங்களுடையப் பாதுகாப்பினை வழங்க உள்ளனர். மேலும், முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த, ஈசட் பிளஸ் மற்றும் எஸ்பிஜி பாதுகாப்பு நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக சிஆர்பிஎப் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

இதனைப் போல், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு வழங்கப்பட்டு வந்த ஈசட் பிளஸ் பாதுகாப்பானது, ஈசட் ஸ்பெஷல் பாதுகாப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, இவர் செல்லும் பொழுது, வாகனப் போக்குவரத்தினை மாற்றி அமைக்கலாம். கூடுதல் பாதுகாப்பும் கொடுக்கப்படும்.

நேற்று மாலை, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், இவ்வளவு நாட்கள் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளித்து வந்த, எஸ்பிஜி பாதுகாப்பு படையினருக்கு என் மனமார்ந்த நன்றிகள் என, ராகுல் காந்தி கூறியுள்ளார்.

HOT NEWS