பிரதமருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றவர்களுக்கு கிடையாது! அமித் ஷா அதிரடி!

29 November 2019 அரசியல்
amithshah1.jpg

சோனியா காந்தியின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பானது, திரும்பப் பெறப்பட்டது. இதனையடுத்து, அவர்களுக்குப் பதிலாக மத்திய ரிசர்வ் படையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், முன்னாள், பிரதமர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டது. அவர்களுக்குப் பதில் மத்திய ரிசர்வ் படையினரே பாதுகாப்புப் பணிக்காக அளிக்கப்பட்டனர்.

இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், எஸ்பிஜி சட்டத் திருத்தத்தினை கொண்டு வந்த அமித் ஷா இனி, பிரதமருக்கு நிகரான பாதுகாப்பு வேறு யாருக்கும் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவித்தார். மேலும், அதே சமயம், முன்னாள் பிரதமர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பிற்குப் பதிலாக, மத்திய ரிசர்வ் படையின் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

இனி மேல், பிரதமர் பதவி விலகிய பிறகு, கூடுதலாக எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், பின்னர் தானாக அந்தப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு, மத்திய ரிசர்வ் படையின் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் கூறினார். இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு பின்வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS