மார்வெல்லில் இனி ஸ்பைடன் மேன் கிடையாது! ஒப்பந்தத்தை முறித்த சோனி நிறுவனம்!

21 August 2019 சினிமா
spiderman6.jpg

டிஸ்னி நிறுவனத்தின் அழுத்தத்தின் காரணமாக, இனி ஸ்பைடன் மேன் திரைப்படத்தை மார்வெல் நிறுவனம் தயாரிக்காது என செய்திகள் வெளியாகி உள்ளன. சோனி நிறுவனமே, இனி தன்னுடைய படங்களில், ஸ்பைடன் மேனை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சோனி திரைப்பட நிறுவனத்தையும், மார்வெல் நிறுவனத்தையும், டிஸ்னி நிறுவனமே நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், மார்வெல் நிறுவனத்துடன் இருந்து வந்த ஒப்பந்தத்தை, சோனி நிறுவனம் முறித்துக் கொண்டுள்ளன. கடந படங்களில் கிடைத்த வருமானத்தைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, இந்த முடிவு ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மார்வெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பீஃஜ்ஜே, இனி ஸ்பைடர் மேன் திரைப்படத்தினை, மார்வெல் நிறுவனம் தயாரிக்காது என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சோனி நிறுவனமே சொந்தமாக தயாரிக்க வாய்ப்புகள் உள்ளன. ஒரு வேலை இரண்டு நிறுவனங்களும், சமரசமாக சென்றால், இருவரும் சம அளவிலான பணத்தினை முதலீடு செய்து படத்தினை தயாரிக்கும் வாய்ப்புகள் உண்டு.

எவ்வாறு இருப்பினும், சோனி தயாரிக்கும் ஸ்பைடர் மேன் திரைப்படத்தினைக் காட்டிலும், மார்வெல் தயாரிக்கும் ஸ்பைடர் மேன் திரைப்படத்திற்கு அதிக ரசிகர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS