இந்த ஸ்பைடர்மேன் தொல்லை வேற! என்னடான்னு யாரும் கேட்க வேண்டாம், இப்பதான் மார்வெல் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் போயிட்டு வந்தோம். அதற்குள் தன்னுடைய அடுத்தப் படத்தை வெளியிட்டது மார்வெல் ஸ்டுடியோஸ்.
ஸ்பைடர்மேன் வரிசையில் இது எத்தனையாவது படம் என்று நீங்களே சொல்லுங்க பார்ப்போம்? அந்த அளவிற்கு இந்த ஸ்பைடன் மேன் படங்கள் வந்துவிட்டன. குறிப்பாக, இந்த ஸ்பைடர்மேன் புதிய பதிப்பில் வெளியாகும் இரண்டாவது படமாகும். மார்வெல் காமிக்ஸின் 23வது படமாகும்.
சரி படம் எப்படின்னு கேட்குறதுக்கு முன்னாடி படத்தின் கதையை சற்று பார்ப்போமா? அவெஞ்சர்ஸ் எண்ட் கேமில் இழந்த அவெஞ்சர்ஸை, இந்த உலகம் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறது. பின்னர், அவர்கள் திரும்பி வரும் பொழுது எப்படி பார்க்கிறது என மிக அழகாகத் திரைக்கதையாக்கி உள்ளனர். அவர்களைப் பெரிய அளவில் காட்டாமல், அவர்களை பற்றிக் கூறியிருப்பது ரசிக்கும் விதத்தில் இருக்கின்றது.
வழக்கம் போலத்தான். நியூயார்க்கில் உள்ள பள்ளிக்கு திரும்புகிறான் ஸ்பைடன் மேன். அங்கு அவனுடைய நண்பன் நெட் மற்றும் ஒரு தலைக் காதலி எம்ஜேவை பார்க்கின்றார். அப்பொழுது பீட்டர் பார்க்கரும், அவருடைய பள்ளி நண்பர்களும் ஐரோப்பாவிற்கு செல்ல இருக்கும் நிலையில், நிக் ப்பியூரி வருகிறார். ஒரு ஆப்ரேஷன் உள்ளது என்கிறார். அப்பொழுது உலகை நோக்கி, அழிக்கும் சக்தி ஒன்று வருகின்றது. அதிலிருந்து, ஸ்பைடர்மேன் உலக மக்களைக் காப்பாற்றினாரா? காதலைக் கூறினாரா? என்பது தான் படத்தின் கதை.
படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ள விதம், பழைய படங்களுக்கும் இதற்குமுள்ளத் தொடர்பு என, இப்படத்தில் வரும் காட்சிகள் நம்மை வாயைப் பிள்ளவைக்கிறது. முதல் பாதி மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதி இரண்டுக்கும் சேர்த்து வைத்து உசைன் போல்ட்டை போல, வேகமாக ஓடுகிறது. மார்வெல் படங்களின், கிராபிக்ஸ் காட்சிகளைப் பற்றிக் கூறவா வேண்டும். அதனைப் பற்றி உங்களுக்கேத் தெரியுமே? இந்தப் படமும் வசூல் வேட்டையாடும் என்பதில் சந்தேகமில்லை.
மொத்தத்தில் ஸ்பைடர் மேன் அவெஞ்செர்ஸின் நம்பிக்கை!