இயக்குநர் ஏஎல் விஜய்க்கும், நடிகை அமலாபாலுக்கும் இடையில் விவகரத்து நடைபெற்ற நிலையில், ஏஎல் விஜய் மருத்துவர் ஒருவரை, இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். அமலாபால் என்ன செய்கின்றார் என அனைவரும் எதிர்பார்த்து வந்தனர்.
அப்பொழுது தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில், பஞ்சாப் மாநிலத்தினைச் சேர்ந்த ஒருவருடன் திருமணக் கோலத்தில் இருக்கின்ற புகைப்படத்தினை வெளியிட்டார். அத்துடன், அந்த நபருக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தினையும் வெளியிடார்.
இது மாபெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்தப் புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார். இருப்பினும், அந்தப் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளங்கள் பலவற்றிலும், உலா வந்து கொண்டிருக்கின்றன. இதனையடுத்து அது வெறும் போட்டோ சூட்டிற்காக எடுத்தப் புகைப்படங்கள் என, அவர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், சர்ச்சைப் புகழ் ஸ்ரீரெட்டி இந்தப் புகைப்படங்கள் குறித்து, பதிவு ஒன்றினைத் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், கவலைப்பட வேண்டாம் அமலா பால். உங்களுடைய பஞ்சாபி கணவர், உங்களை நல்ல விதத்தில் பார்த்துக் கொள்வார் எனவும், நான் பஞ்சாபிகளை நம்புவதாகவும் கூறியுள்ளார்.