சென்ற வாரம் தான், ஒரு சர்ச்சையைக் கிளப்பினார் சர்ச்சைப் புகழ் ஸ்ரீரெட்டி. அவர் தற்பொழுது அடுத்த அதிரடி குண்டினைத் தூக்கிப் போட்டுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவினைச் சேர்ந்தவர்கள், தன்னை பயன்படுத்திக் கொண்டார்கள் என, முதன் முறையாக தன்னுடைய குரலை வெளிப்படுத்தினார் நடிகை ஸ்ரீரெட்டி. அவருடைய புகாரில், தெலுங்கு நடிகர்கள் முதல் ஏ ஆர் முருகதாஸ் வரை அனைவருமே இருந்தனர்.
இந்நிலையில், அடுத்ததாக நடிகர் விஷாலின் ஆணுறுப்பின் நீளம் எவ்வளவு என, தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கேள்வி எழுப்பினார். பின்னர், சென்ற வாரம் என்னைப் பிடிக்காதவர்கள் என்னுடைய ஜட்டியினை முகர்ந்து பாருங்கள். அப்பொழுது என்னைப் பிடிக்க ஆரம்பித்து விடும் எனக் கூறினார்.
இப்பொழுது, புதிதாக எனக்கும் திமுக இளைஞரணி செயலாளரும், முரசொலி நிர்வாக இயக்குநரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார். என்னுடையப் பெயரில் செயல்பட்டு வரும் பல போலி சமூக வலைதளக் கணக்குகளில் இருந்து, பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன எனவும் அது என்னுடையது அல்ல எனவும் கூறியுள்ளார். மேலும், என்னுடையப் பெயரில் இயங்கி வரும் கணக்குகள் மூலம், உதயநிதியின் பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் முயற்சி செய்கின்றனர் எனவும் கூறினார்.
விரைவில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியில் இணைய உள்ளதாகவும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.