எங்கள் நாட்டில் ஐபிஎல் நடத்தலாம்! பிசிசிஐக்கு பிரபல நாடு அழைப்பு!

17 April 2020 விளையாட்டு
ipl.jpg

எங்கள் நாட்டில் ஐபிஎல் நடத்துங்கள் என, இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.

உலகளவில் பரவி உள்ள கொரோனா வைரஸால், இந்தியாவும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரஸால் வருகின்ற மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, அனைத்து பொதுச் செயல்பாடுகளும் முடக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், மார்ச் 29ம் தேதி அன்று ஆரம்பமாக இருந்த, இந்த ஆண்டிற்கான ஐபிஎல் டி20 தொடரானது தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

அடுத்து எப்பொழுது, ஐபிஎல் போட்டியானது நடைபெறும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்நிலையில், பிசிசிஐ கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின், பாதுகாப்பான சூழ்நிலை உருவான பின்னரே இந்த ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று கூறப்பட்டு உள்ளது. இது குறித்து, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேட்டியளித்துள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பும், சுகாதாரமுமே முக்கியம் என்று கூறியுள்ள அவர், தொலைக்காட்சி நிறுவனங்கள், ஸ்பான்சர்கள், அணியின் நிர்வாகிகளுடன் இது குறித்துப் பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வருகின்ற செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் இந்த விளையாட்டுத் தொடர் நடைபெறலாம் என, கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், எங்கள் நாட்டில் இந்தியாவிற்கு முன்னரே கொரோனா வைரஸானது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். எனவே, எங்கள் நாட்டில் ஐபிஎல் தொடரினை நடத்துங்கள் என, இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசியுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் சம்மி ஷில்வா கொழும்புவில் செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து, விரைவில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுத இருப்பதாகவும், பிசிசிஐ அனுமதி அளித்தால் கண்டிப்பாக இலங்கையில் சிறப்பாக இந்தப் போட்டித் தொடர் நடத்தப்படும் எனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS