இலங்கை நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு கலைப்பு! ஏப்ரலில் தேர்தல்!

03 March 2020 அரசியல்
gotabayarajapaksa.jpg

இலங்கையில் பதவிக் காலம் முடிய இன்னும் ஆறு மாதங்கள் உள்ள நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதனையடுத்து, வருகின்ற ஏப்ரல் மாதம் அந்நாட்டில், அதிபருக்கானத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இலங்கை அரசியலமைப்பு விதிகளின் படி, ஆட்சி அமைத்து நான்கரை வருடங்கள் கழித்தே, நாடாளுமன்றத்தினைக் கலைக்க இயலும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த ஜனவரி ஒன்றாம் தேதியுடன் நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனையடுத்து, ஆட்சியினைக் கலைக்கும் முடிவானது தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

அந்நாட்டின் பெரும்பான்மையினை, ஐக்கிய தேசிய கூட்டணி தக்க வைத்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கும், மேல்மட்ட நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில், வாக்குவாதங்கள், மற்றும் உடன்பாடுகள் ஒற்றுமையாக எடுக்கப்பட முடியாமலேயே இருந்தது. அந்நாட்டின் அதிபராக, இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் தலைவராக கோத்தபயா ராஜபக்சே இருந்து வந்தார்.

அவர் நேற்று, அதிகாரப்பூர்வமாக தன்னுடைய ஆட்சியினைக் கலைத்தார். இதனால், இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தலானது, ஏப்ரல் மாதம் 25ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலானது, வருகின்ற மார்ச் மாதம் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை பெறப்பட உள்ளது. தேர்தல் நடைபெற்று முடிந்ததும், ஒன்பதாவது நாடாளுமன்றமானது, மே மாதம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS