Pic credit:twitter.com/sripriya
விஜய் டிவியில், தற்பொழுது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது. அந்நிகழ்ச்சியினை, விஜய் டிவியின் புகழ்பெற்ற நட்சத்திர தொகுப்பாளர்கள் ம.க.பா.ஆனந்த் மற்றும் பிரியங்கா ஆகியோர், வழங்கி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில், பல போட்டியாளர்கள் பங்குபெற்று தங்களுடைய பாடல் திறமையை, வெளிப்படுத்திவருகின்றனர். அவர்களைக் கிண்டல் செய்தும், அவர்களுடன் விளையாடியும் பேசுவது இந்த தொகுப்பாளர்களின் வழக்கம். இந்நிலையில், அவர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற மூக்குத்தி முருகனைப் பற்றி கிண்டல் செய்து வந்தனர். அவருடைய மூக்குப் பெரிதாக இருப்பதால், அதனை அவர்கள் ஒரு விளையாட்டிற்காக, பயன்படுத்திக் கிண்டல் செய்து வந்தனர்.
இந்நிலையில், அதனை கண்டித்து மக்கள் நீதிமய்யத்தின் பெண் தலைவரும், நடிகையுமான ஸ்ரீப்பிரியா இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தன்னுடைய டிவிட்டர் பதிவில, கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
#vijaytvsupersinger ல்1வரின் மூக்கை கேலிசெய்வதும்,எடையை கேலிசெய்வதும் சரியில்லை,#makapa #priyanka உங்களின் தொகுத்து வழங்கும் திறமை எனக்கு வியப்பை அளிப்பது உண்மை,நீங்கள்1வரை1வர் கேலி செய்து கொள்ளுங்கள் மற்றவரை கேலி செய்து அசிங்க படுத்த உரிமை யார் கொடுத்தது #உருவகேலியைஎதிர்போம்
— sripriya (@sripriya) September 7, 2019
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், விஜய்டிவி சூப்பர் சிங்கரில் ஒருவரின் மூக்கைப் பற்றி கேலி செய்வதும், எடையை கேலி செய்வதும் சரியில்லை. மகாபா மற்றும் பிரியங்கா உங்களின் தொகுத்து வழங்கும் திறமை எனக்கு வியப்பை அளிப்பது உண்மை. நீங்கள் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொள்ளுங்கள். மற்றவரை கேலி செய்து அசிங்கப்படுத்த உரிமை யார் கொடுத்தது என #உருவகேலியைஎதிர்ப்போம் என பதிவிட்டுள்ளார். மேலும், நேரம் கிடைக்கும் பொழுது, நான் பார்ப்பது விஜய் டிவி தான். அனைத்து நிகழ்ச்சிகளிலும், உருவ கேலி அதிகம் வருவது சோகம். மாற்றிக் கொள்வார்களா? ஒருவரை ஒருவர் கேலி செய்து, காமெடி செய்வது கேவலம். என்றும் பதிவிட்டுள்ளார். இதனை #OpposeBodyShaming #opposingvijaytvbodyshaming என்ற ஹேஸ்டேக்குகள் மூலம் கூறினார். இது சமூக வலைதளங்களில், வைரலாகி வருகிறது.
#vijaytvsupersinger I appreciate #makapaanand #priyanka’s achoring talents,let them tease each other but who gave them the rights to body shame the contestants?teasing ones nose,weight & much more is disgusting #opposebodyshaming
— sripriya (@sripriya) September 7, 2019