உலகில் நடத்தப்பட்ட மிக மோசமான மற்றும் அபாயகரமான சோதனையைப் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.
1962 JULY 9-ல் அமெரிக்க அரசாங்கம் (AEC) எனப்படும் அமைப்புடன் சேர்ந்து "ஸ்டார் பிஸ் ப்ரைம்" எனும் அணு ஆயுதச் சோதனையை வின்வெளியில் நிகழத்தியது. சுமார் 1.4 மெகா டன் எடையுள்ள W-49 எனும் அணு ஆயுதத்தை "தோர்" விண்கலத்தின் மூலம் ஹவாய் தீவிலிருந்து ஏவப்பட்டது. தரையிலிருந்து, சுமார் 1,450கி.மீ. உயரத்தில் இந்த சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனை ஹவாய் நேரப்படி, இரவு 11.00 மணிக்கு நடைபெற்றது.
இந்த அணு ஆயுதச் சோதனையின் போது சூரியன் தோன்றும் போது ஏற்படும் வெளிச்சத்தை இரவில் கண்டதாக அப்பகுதி மக்கள் விவரித்துள்ளனர்.
இந்தச் சோதனையின் போது வெளிப்பட்ட மின்காந்த அலைகள் மற்றும் வெப்பக்கதிர் வீச்சின் பாதிப்பால், ஹவாய் நகரில் மின்சாரம் ஒரு நாள் முழுவதும் பல நகரங்களில் துண்டிக்கப்பட்டது. இதன் தாக்கம் அடுத்த 5 ஆண்டுகள் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சோதனையின் போது விண்வெளியில் அமெரிக்க அரசாங்கம் கூறினாலும் உண்மையை மட்டும் கூறவில்லை, என்பதை வல்லுநர்கள் அடித்துக் கூறுகின்றனர்.