5 டிரில்லியன் பொருளாதாரத்திற்கு மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும்!

08 November 2019 அரசியல்
modislamsnaidu.jpg

அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசும் பொழுது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் 5 டிரில்லியன் பொருளாதாரத்தினை எட்டும் கடமையும், சக்தியும் உள்ளது என பாரதப் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் பொழுது, இந்தியாவானது விரைவில் 5 டிரில்லியன் பொருளாதாரத்தினை எட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று முதலீட்டாளர்கள் முன்னிலையில் பேசிய பிரதமர், வரும் 2020ம் ஆண்டு, உலக வங்கியின் பட்டியலில், தொழில் மற்றும் வியாபாரம் செய்ய ஏதுவான நாடுகளின் பட்டியலில், இந்தியாவின் மதிப்பு உயரும் என்றும், தொடர்ந்து, இந்தியாவில் முதலீட்டாளர்கள் குவிந்து வருகின்றனர் என்றும் கூறினார். மேலும் அவர் பேசுகையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும், மாவட்டங்களும் வரும் 2035ம் ஆண்டுக்குள் இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர், மதிப்புள்ள பொருளாதாரத்தினை உருவாக்கும் பணியும், சக்தியும் உள்ளது எனவும் கூறினார்.

HOT NEWS