50000 குடும்பங்கள் பாதிக்கப்படும்! எதிர்பார்க்காத தீர்ப்பு! வேதாந்தா குழுமம் பேட்டி!

18 August 2020 அரசியல்
sterlite.jpg

ஸ்டெர்லைட் ஆலை திறக்கத் தடை தொடரும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பானது, எதிர்பார்க்காத ஒன்று என வேதாந்தா குழுமம் தெரிவித்து உள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பினைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்தார் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பங்கஜ்குமார். அவர் பேசுகையில், எவ்வித இடையூறும் இல்லாமல், கடந்த 25 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகின்றது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கின்றது. இருப்பினும், எங்களுடைய சட்டப் போராட்டத்தினை தொடர்வோம். ஆலை மூடப்பட்டு இருப்பதை, மற்ற முதலீட்டாளர்கள் கண்டிப்பாக உற்று நோக்குவார்கள்.

ஆலை மூடப்பட்டு இருப்பதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 600 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஆலை மூடப்படுவதால், அதிகளவிலான தாமிரத்தினை நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் இருக்கும். நீதிமன்றத்தின் தீர்ப்பானது மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றது. அரசியல் குறுக்கீடு உள்ளதா? இல்லையா என்பதை விட, நீதியினை நம்பி இருக்கின்றோம்.

இந்த முடிவு, பலருக்கும் ஏமாற்றத்தினை வழங்கும் விதத்தில் உள்ளது. இதனால், 50,000 குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. விரைவில் சட்டப்படி அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS