இந்தியாவிற்கு எதிராக 2 தவறான தீர்ப்புகள்! ஸ்டீவ் பக்னர் பேட்டி!

20 July 2020 விளையாட்டு
stevebucknor.jpg

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும், கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 2 தவறான தீர்ப்புகளை அளித்துள்ளதாக, அப்போட்டியின் நடுவர் ஸ்டீவ் பக்னர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இந்தியாவும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. இதில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டினை இழந்து, 134 ரன்கள் எடுத்துத் திணறி வந்த நிலையில், இஷாந்த் சர்மா வீசியப் பந்தில் சைமண்ட்ஸ் 30 ரன்களிலேயே டோனியிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால், அதனை அப்பொழுது நடுவராக இருந்த பக்னர் அவுட் இல்லை என்றுக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, ஐந்தாவது நாள் ஆட்டத்தின் பொழுது, இந்திய வீரர் ராகுல் டிராவிட் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது, அவர் காலில் பட்டு ஆஸ்திரேலிய வீரர் கேட்ச் பிடித்தார். அதற்கு, அவுட் கொடுத்தார் பக்னர். ஆனால், டிராவிட்டின் பேட்டில் பந்து படவே இல்லை. இந்த இரண்டு தவறான முடிவுகள், ஆட்டத்தினை ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக மாற்றியது.

இந்தத் தவறான முடிவுகளுக்கு இந்தியா மட்டுமின்றி, உலகளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பற்றி விசாரித்த ஐசிசி, ஸ்டீப் பக்னரை நடுவர் பொறுப்பில் இருந்து விடுவித்தது. இந்நிலையில், தற்பொழுது தனியார் டிவி சேனல் நடத்திய நிகழ்ச்சிக்கு ஸ்டீவ் பக்னர் பேட்டியளித்தார். அவர் பேசுகையில், இந்த இரண்டு தவறுகளும் என்னால் மறக்க இயலாதவை.

இன்னும் மனதினை உருத்திக் கொண்டே இருப்பவை. அதற்குக் காரணம் உள்ளன. டிவியில் பார்ப்பதற்கும், நடுவர் களத்தில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. டிவியிலும், காமெண்ட்ரியிலும் உங்களால் போல்டில் உள்ள மைக்கின் சப்தத்தினைக் கேட்க இயலும். ஆனால், நடுவரால் அவ்வாறு கேட்க இயலாது. அங்கு பேட்டில் பட்டதா அல்லது கால் பேடில் பட்டதா எனத் துல்லியமாகக் கேட்க இயலாது. அதனால் தான், அத்தகையத் தவறு நடைபெற்றது என்றுக் கூறியுள்ளார்.

Recommended Articles

HOT NEWS