500 கிலோ மீட்டர் நடந்தே வந்த தமிழக மாணவர்! மாரடப்பால் மரணம்!

03 April 2020 அரசியல்
ambulancelive.jpg

இந்தியா முழுவதும், ஊரடங்கு உத்தரவால் பொதுப் போக்குவரத்துக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் பல நூறு கிலோ மீட்டர்கள் நடைபயணமாக சென்று, தங்களுடைய சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

பலர், சாலைகளிலேயே தங்கி இருக்கின்றனர். இந்நிலையில், 500 கிலோ மீட்டர் நடந்து வந்த தமிழக மாணவர் ஒருவர், மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் தற்பொழுது சோகத்தினை ஆழ்த்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பகுதியினைச் சேர்ந்தவர் லோகேஷ். 23 வயதுடைய இவர், மஹாராஷ்டிரா பகுதியில் அமைந்துள்ள, உணவுப் பதப்படுத்தும் மையத்தில் மாணவராக பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அங்கு உண்ண உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை.

இதனால், தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து, நடைபயணமாக, 1250 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு வரத் திட்டமிட்டார். இருப்பினும், ஹைதராபாத் பகுதியில் உள்ள செகந்திராபாத் நெருங்கிய வேலையில், அவரையும் அவருடைய நண்பர்களையும் மடக்கிப் பிடித்தப் போலீசார், அவர்களை ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அங்கு உறங்கிக் கொண்டிருந்த லோகேஷிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் காலமானதாக கூறியுள்ளனர். இது தற்பொழுது, அவருடைய ஊரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

HOT NEWS