படிக்கும் பொழுதே இனி வேலைக்குச் செல்லலாம்! கேரளாவில் அனுமதி!

11 March 2020 அரசியல்
pinarayivijayanpic.jpg

இனி, கேரளாவில் உள்ள மாணவ மற்றும் மாணவிகள், படிக்குமவ பொழுதே வேலைக்குச் செல்ல அனுமதிக்கும் திட்டமானது, வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

கேரளாவில் 18 முதல் 25 வயதுடைய, கல்லூரியில் படிக்கும் மாணவ மற்றும் மாணவிகள், படிக்கும் பொழுதே வேலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த திட்டமானது, கேரள சட்டசபையில் முன் வைக்கப்பட்டது. முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான அரசு, இதற்கு அனுமதி வழங்கியது.

குறைந்தது 90 நாட்கள் பணி உத்திரவாதம் அளிக்கும் வகையில், கேரள பொதுத் துறை நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தனியார் நிறுவனங்களை அனுமதிக்கவும் திட்டமிட்டுள்ளது.

அவ்வாறு அனுமதிப்பதன் மூலம், படிக்கின்ற மாணவர்கள் பகுதி நேரமாக வேலைக்குச் செல்ல இயலும். மேலும், அவர்கள் சம்பாதிக்கும் பணமானது, அவர்களுடையக் கல்விச் செலவுக்கும், வீட்டின் தேவைக்கும் பயன்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS