பேனர் வைத்த ஜெயகோபல் கைது! போலீசார் விசாரணை!

28 September 2019 அரசியல்
suba.jpg

சுபஸ்ரீ மரணத்திற்குக் காரணமாக இருந்த, அதிமுக பிரமுகர் திரு. ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் உள்ள பள்ளிக்கரணைப் பகுதியில், தன்னுடைய இல்லத் திருமண விழாவிற்காக, பேனர்களை ரோட்டில் வைத்திருந்தார் ஜெயகோபால். அப்பொழுது, அங்கிருந்த பேனர் ஒன்று, ரோட்டில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற பெண்ணின் மீது விழுந்தது. இதானல், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ நிலைத் தடுமாறி, கீழே விழுந்தார். அப்பொழுது, எதிர்ப்பாராத விதமாக, பின்னால் வந்த லாரியால் ஏறி, பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தப் பிரச்சனையைத் தொடர்ந்து, தமிழகத்தின் பலக் கட்சிகளும், நடிகர்களும் பிளக்ஸ் மற்றும், பேனர்கள் வைக்க வேண்டாம் என, கோரிக்கை வைக்க ஆரம்பித்தனர். மேலும், நீதிமன்றத்தில் பேனர் வைக்கமாட்டோம் என, திமுக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. மேலும், இந்த விபத்திற்குக் காரணமான, அந்த பேனர்களை வைத்த ஜெயகோபாலை, கைது செய்ய வேண்டும் எனவும், கூறப்பட்டது.

இந்தப் பிரச்சனைகளுக்கு நடுவே, ஜெயகோபால் தலைமறைவானார். அவரை, போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர். இந்நிலையில், அவரை கிருஷ்ணகிரிக்கு அருகில் உள்ள பகுதியில் கைது செய்தனர். பின், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 11ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

HOT NEWS