நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் பற்றி ஒன்றும் தெரியாது! பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து!

03 September 2019 அரசியல்
subramanianswamy.jpg

பாஜகவில் இருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, பொருளாதாரம் பற்றி ஒன்றும் தெரியாது என்று, பாஜகாவின் மூத்த தலைவர் திரு. சுப்பிரமணியன் சுவாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நம் இந்திய நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவி வருவதாக, பல நிறுவனங்களின் தலைவர்கள் கூறி வருகின்றனர். இதன் காரணமாக, பல நிறுவனங்களும், தங்களுடைய ஊழியர்களை ஆயிரக்கணக்கில் நீக்கி வருகின்றனர்.

இதனையொட்டி, நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பொருளாதார மந்தநிலை இல்லை என, பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்தார். அதே சமயம், புதிய சலுகைகளையும் நிறுவனங்களுக்கு அளித்தார்.

இது குறித்து பேட்டியளித்த பாஜகவின் பழம்பெரும் தலைவரான, திரு. சுப்பிரமணிய சுவாமி, தற்பொழுதுள்ள பாஜகவில் பொருளாதாரம் படித்தவர்கள் கிடையாது. நிதியமைச்சருக்கும் பொருளாதாரம் தெரியாது. நம் நாட்டு மக்களுக்கு எதை செய்தாலும், ஊக்கப்படுத்துவதற்கு எதாவது செய்ய வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, வரியை விதித்து மேலும் வரியை விதிக்கின்றனர். பாஜக ஆட்சியில் மூன்று பேர் நிதியமைச்சர்களாக இருந்துள்ளனர். அருண் ஜெட்லி, பியூஸ் கோயல் மற்றும் நிர்மலா சீதாராமன் உட்பட, இவர்களுக்கு பொருளாதாரம் தெரியாது.

மேலும், புரியாமல் இருக்கின்ற ஜிஎஸ்டியை விதித்து, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறி, கிராமத்தில் மின்சாரமே இல்லை, பின்னர் எப்படி பதிவேற்றம் செய்ய முடியும்? வெளிநாட்டில் இருந்து பணத்தைக் கொண்டு வர முயற்சி பண்ணி ஒன்னும் ஆகல. கிராமங்களுக்கு விவசாயிகள் ஏற்றுமதிக்கு எதுவும் செய்யவில்லை. கிராமங்களுக்கு எதாவது செய்ய வேண்டும். அப்பொழுது தான் விவசாயம் முன்னுக்கு வரும். என்று அவர் கூறியுள்ளார்.

ஒரு பாஜகவின் முக்கியமான, மூத்தத் தலைவரே இப்படிக் கூறியிருப்பது, பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS