பணத்தில் மஹாலட்சுமி இருந்தால், இந்தியா ரூபாயின் மதிப்பு உயரலாம்! சுப்ரமணிய சாமி பேச்சு!

16 January 2020 அரசியல்
subramanianswamy.jpg

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற, சுவாமி விவேகானந்தா வியாகான்மாலா நிகழ்ச்சியில், பங்கேற்ற பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜ்யா சபை எம்பியுமான சுப்பிரமணிய சுவாமி இந்தியா ரூபாயில் மகா லட்சுமி படம் இருந்தால், இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்றுக் கூறியுள்ளார்.

செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில், காங்கிரஸூம், மகாத்மா காந்தியும் சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். ஏன், 2003ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்த சட்டத்தினைக் கொண்டு வருவதற்கு ஆலோசனை கூறினார். ஆனால், தற்பொழுது நாம் இதனைக் கொண்டு வந்து இருக்கின்றோம். ஆனால், அதனை அவர்கள் எதிர்க்கின்றனர்.

செய்தியாளர் ஒருவர், இந்தோனேஷியாவின் பணத்தில், விநாயகரின் படம் உள்ளதே என்று கூறினார். அதற்கு, ஆம் விநாயகர் தடைகளை நீக்குபவர். அவர் படத்தினை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இதனை நீங்கள் பிரதமர் மோடியிடம் கூறுங்கள். ஒரு வேளை மகாலட்சுமியின் படத்தினை, நம் இந்திய ரூபாயில் பயன்படுத்தினால், கண்டிப்பாக இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என நம்புகின்றேன் என்றார்.

விரைவில், யூனிபார்ம் சிவில் சர்வீஸ் கோட் திட்டத்தினை பாஜக அரசு அமல்படுத்த உள்ளது. அதனை கடந்த 70 வருடங்களாக, உச்சநீதிமன்றம் கூறி வருகின்றது. அந்தத் திட்டத்தினை ஆர்டிகல் 44ன் படி அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 2025ம் ஆண்டில், இந்தியா நாடு, சீனாவின் மக்களைத் தொகையினை பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடிக்கும் என்றார்.

HOT NEWS