ரஜினிக்கு சுப்பிரமண்ய சுவாமி ஆதரவு! கவனமாக பேச வேண்டும்- முக ஸ்டாலின்!

21 January 2020 அரசியல்
rajnikanth.jpg

பெரியார் பற்றி தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது எனவும், அதற்கு வருத்தமும் தெரிவிக்க முடியாது எனவும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.

இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அவுட் போன்ற பத்திரிக்கைகளில், கடந்த 2017ம் ஆண்டு, நான் என்ன பேசியிருந்தேனோ, அதனை செய்தியாகவே வெளியிட்டு இருக்கின்றனர். நான் ஆதாரம் இல்லாமல் பேசவில்லை. பெரியார் நடத்திய ஊர்வலத்தில், ராமன் மற்றும் சீதை ஆகியோரின் நிர்வாணப் படங்கள் கொண்டு வரப்பட்டது. அதற்கு, செருப்பு மாலைகள் முதலியவை அணிவிக்கப்பட்டன.

இவை நடந்தது தான். இது மன்னிக்கப் பட வேண்டிய விஷயம் அல்ல. மறக்கப்பட வேண்டிய விஷயம் என்றும், தான் பேசியதில் தவறு இல்லை எனவும், அதனால் தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை எனவும், வருத்தமும் தெரிவிக்க முடியாது எனவும் ரஜினிகாந்த் கூறினார்.

இதனையடுத்து, ரஜினிகாந்த் தன்னுடைய கருத்தில் இருந்து பின்வாங்காவிட்டால், அவருக்கு சட்டப்படியான ஆதரவு மற்றும் உதவிகளைத் தாம் செய்யத் தயார் எனவும், தேவைப்பட்டால் ரனிக்காக நீதிமன்றத்தில் ஆஜராகவும் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், ரஜினிகாந்தின் பேச்சு குறித்து, திமுக தலைவர் முக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், நணபர் ரஜினிகாந்த், ஒரு நடிகர். அவர் பெரியார் பற்றிப் பேசும் பொழுது யோசித்துப் பேச வேண்டும் என கூறியிருக்கின்றார்.

HOT NEWS