சுபஸ்ரீ உயிரிழப்பு! யார் பொறுப்பு!

13 September 2019 அரசியல்
suba.jpg

பேனர்கள் மற்றும் தேவையற்றப் போஸ்டர்கள் வைக்கவோ, பயன்படுத்தவோ கூடாது என உயர்நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது. இந்நிலையில், நேற்று பேனரால் ஏற்பட்ட விபத்தில், சுபஸ்ரீ என்றப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கனடாவிற்கு செல்வதற்கு பரிட்சை எழுதிவிட்டு, இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய சுபஸ்ரீயின் மீது, அங்கு வைக்கப்பட்டிருந்து பேனர் விழுந்ததில், பைக்கில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார் சுபஸ்ரீ. அப்பொழுது, பின்னால், வேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஏறியதில், சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சர்ச்சைக்குரிய வகையில் பேனர் வைக்கப்பட்டதாலேயே, இந்தப் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து, அதிமுக அரசாங்கமே இதற்குக் காரணம் எனவும், சமூக வலைதளங்களில் பலரும் தங்களுடையக் கருத்துக்களைப் பதிவிட்டனர்.

இந்நிலையில், விதிகளை மீறி, பேனர் வைத்ததற்காக, அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது, பள்ளிக்கரணைப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அந்தப் பேனரை அடித்துக் கொடுத்த நிறுவனத்திற்கும், போலீசார் சீல் வைத்தனர்.

உண்மையில் தவறு செய்தவர்கள், அந்த பேனரை அச்சடித்த நிறுவனமோ அல்லது அந்த கவுன்சிலரோ அல்ல. அந்தப் பேனரை வைக்க அனுமதி அளித்த அதிகாரிகளே. அதிகாரிகள் அனுமதி தராமல், பேனர் வைக்க முடியாது. அப்படி அனுமதி அளித்த அதிகாரிகள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வேளை அதிகாரிகளிடம் அனுமதி வாங்காமல், வைத்திருந்தால், பேனர் வைத்த ஜெயகோபால் மீது தான், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில், அந்த பேனர் வைக்கும் நிறுவனத்திற்கு சீல் வைத்துள்ளது பற்றியும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

HOT NEWS