சுசிலீக்ஸ் புகழ் சுசித்திரா காணாமல் போனதை அடுத்து, போலீசாரின் தீவிர தேடுதலுக்குப் பின் அவர் மீண்டும் கிடைத்தார்.
சுசிலீக்ஸ் என்ற ஹேஸ்டேக் மூலம், நடிகர் தனுஷ் முதல் இயக்குநர் ஷங்கர் வரை, அனைவரது அந்தரங்க விஷயங்களையும், புகைப்படமாகவும், வீடியோவாகவும் வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியவர் தான் பாடகி சுசித்ரா.
இவர் தன்னுடைய கணவரும், நடிகருமான கார்த்திக் குமாருடன் சண்டையிட்டதன் காரணமாக, இருவரும் தனியாகப் பிரிந்து வாழ்ந்தனர். சுசித்ரா தன்னுடைய தங்கையின் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். சில ஆண்டுகளாக, தங்கையுடன் வாழ்ந்து வந்த சுசித்ரா திடீரென்று மாயமானார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த அவருடையத் தங்கை சுனிதா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, சுசித்ராவின் போன் சிக்னலை கண்டுபிடித்த போலீசார், அது ஒரு நட்சத்திர விடுதியில் இருந்து வந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.
பின்னர், அந்த இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்த சுசித்ராவினை மீட்டு வந்தனர். தற்பொழுது சுசித்ராவினை, மருத்துவ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.