உலகில் உள்ள அனைவருக்கும் பிரமிடுகள் என்றால் ஞாபகத்திற்கு வருவது எகிப்து நாடும், மம்மிகளும் தான். அந்த அளவிற்கு இவைகளுக்கு இடையிலான உறவானது, மிகவும் நெருக்கமான ஒன்று ஆகும்.
கிமு 751ம் ஆண்டுகளின் பொழுது, எகிப்தினை ஆட்சி செய்த குசைட் அரசர், பியாங்கீ ஆகியோர் தான் இந்த எகிப்திய பிரமிடுகளை உருவாக்கும் முறையினை ஆரம்பித்து வைத்துள்ளனர். அங்கு இறக்கும் அரசர்கள் மீண்டும் உயிர்தெழுவார்கள் என்ற நம்பிக்கையுடன், அவர்கள் உடலானது பதப்படுத்தப்பட்டு அங்கு மம்மிக்களாக பாதுகாக்கப்பட்டன. அங்கு அவர்கள் பயன்படுத்தியப் பொருட்களும் வைக்கப்பட்டன.
நைல் நதியினை ஆதாரமாக கொண்டு செயல்பட்டு வந்த எகிப்து சாம்ராஜ்ஜியமானது, காலப்போக்கில் அழிந்து போனது. இருப்பினும், அங்கு இருந்த மம்மிக்களும், எகிப்து பிரம்மிடுகளும் இன்னும் உலகின் ஆச்சர்யமான விஷயமாகவே அனைவராலும் பார்க்கப்படுகின்றது. அவைகள் பல வரலாற்றுச் சான்றுகளைத் தன்னகத்தே வைத்திருந்தாலும், அதன் மொழியானதுப் பலருக்கும் புரியாதக் காரணத்தால், அவைகள் அழியும் நிலையில் உள்ளன.
இங்கு தான் உலகின் அதிக பிரமிடுகள் இருப்பதாகப் பலர் கருதுகின்றனர். இங்கு 113 முதல் 138 பிரமிடுகளே உள்ளன. ஆனால், இதனை விட இரண்டு மடங்கு அதிக பிரமிடுகள் சூடான் நாட்டில் உள்ளன. சுமார் 255 பிரமிடுகள் தற்பொழுது வரை, சூடான் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இதுவும் முன்னாள் அரசர்களின் சமாதிகளாக உள்ளன.
இங்கு தற்பொழுது வரை, 21 அரசர்களின் உடல்களும் 52 அரசிகள் மற்றும் இளவரசிகளின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவைகள் 20 அடி முதல் 98 அடி வரையிலும் உயரம் உடையவையாகக் கணக்கிடப்பட்டு உள்ளன. இவைகள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தான் கட்டப்பட்டு இருப்பது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.