நேற்று அமெரிக்காவில் முழு சூரியக் கிரகணம் நிகழ்ந்தது. இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா, பிரேசில் போன்ற நாடுகளில், இந்த சூரியக் கிரகணம் முழுவதுமாகவும், தெளிவாகவும் தெரிந்தது. இதனை வெறும் கண்ணில் காண இயலாது என்பதால், இதனை பார்ப்பதற்கு, பல வசதிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல வசதிகளை செய்து வைத்தன.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, இதற்குத் தனி ஏற்பாடு செய்திருந்தது. அமெரிக்க நேரப்படி மாலை 3 மணி முதல் 6 மணி வரை, இந்த சூரியக் கிரகணத்தை பொது மக்களால் பார்க்க இயலும். மேலும், இந்த சூரியக்கிரகணத்தை யூடியூபில், நேரலையாக ஒளிப்பரப்பவும் செய்தது.
இந்த சூரியக்கிரகணம் நம் நாட்டில் தெரியவில்லை என்றாலும், தென் அமெரிக்க நாடுகளான விஷூணா, மற்றும் சிலி போன்ற நாடுகளிலும் பார்க்க இயலும். இந்த நேரலை ஒளிபரப்பை, இந்தப் பகுதிகளில் உள்ள தொலைநோக்கிகளை வைத்து ஒளிபரப்பியது நாசா.