சூரியனின் மேற்பரப்பினை, தற்பொழுது விஞ்ஞானிகள் படம்பிடித்துள்ளனர். இது தற்பொழுது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
கடந்த ஆண்டு, உலகின் முதல் பிளாக் ஹோல் புகைப்படம் வெளியானது. இது, விண்வெளி ஆய்வின் மாபெரும் கண்டுபிடிப்பாகவே தற்பொழுது வரை பார்க்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சனிக் கிரகத்திற்கு விண்கலங்களை விஞ்ஞானிகள் அனுப்பியுள்ளனர்.
தற்பொழுது அமெரிக்காவின் ஹவாய் பகுதியில் அமைந்து உள்ள, டேனியல் இனோய் என்ற தொலைநோக்கியினைப் பயன்படுத்தி, சூரியனைப் புகைப்படம் எடுத்துள்ளனர். அதில், சூரியனின் மேற்பரப்பு எப்படி இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு கடலை மிட்டாய் போல இருக்கும் இது, ஒவ்வொரு துண்டும் சுமார் 700 முதல் 1500 கிலோ மீட்டர் சுற்றளவு உடையது. அவ்வளவு பெரிய விஷயமானது, தற்பொழுது சிறியதாக புகைப்படத்தில் பதிவாகி உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய தொலைநோக்கியான டேனியல் இனோய் மூலம், இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சூரியனைப் பற்றிய ஆய்வுகள் விரிவாக நடைபெற உள்ளன.