1721 கோடி ரூபாய் ஊக்கத் தொகை! சுந்தர் பிச்சை காட்டில் பண மழை!

23 December 2019 அரசியல்
sundarpichai.jpg

கூகுள் நிறுவனத்தின் சிஈஓ சுந்தர் பிச்சை, தற்பொழுது ஆல்பபெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சிஈஓவாக பதவியேற்றார். இதனால், அவருடைய சம்பளமும் உயர்ந்துள்ளது.

கடந்த 15 வருடமாக, கூகுள் நிறுவனத்தில், தமிழரான சுந்தர் பிச்சை பணியாற்றி வருகின்றார். இவருடைய உழைப்பினையும், திறமையையும் நன்கு உணர்ந்த கூகுள் நிறுவனம், அவரை கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக நியமித்தது. அவருடையத் தலைமையின் கீழ், தொடர்ந்து அபரீத வளர்ச்சியினை நோக்கிப் பயணித்து வருகின்றது.

இதனையடுத்து, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் தன்னுடைய, தலைமை அதிகாரியாக நியமித்தது. அதற்கு வருடத்திற்கு 17.5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இது என்னப் பெரிய விஷயம், அடுத்து வரும் தகவல் தான் தலைசுற்ற வைக்கும் தகவல் ஆகும். அடுத்த மூன்று ஆண்டுகள், அவருடைய சேவையைப் பொறுத்து அவருக்கு 1721 கோடி ரூபாயினை பரிசுப் பணமாக வழங்க உள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. தொடர்ந்து, அமெரிக்காவின் பல குற்றச்சாட்டுகளுக்கு கூகுள் நிறுவனம் உள்ளாகி இருந்தாலும், அவைகளில் இருந்து வெற்றிகரமாக தன்னுடைய தலைமையில் அந்நிறுவனத்தினை சுந்தர்பிச்சை வளர்த்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS