இந்தியாவில் 75000 கோடி முதலீடு செய்யும் கூகுள்! சுந்தர் பிச்சை அறிவிப்பு!

14 July 2020 தொழில்நுட்பம்
modisundarpichai.jpg

இந்தியாவில் டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்காக 75,000 கோடியில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக, சுந்தர் பிச்சைத் தெரிவித்து உள்ளார்.

நேற்று இந்தியப் பிரதமர் மோடியும், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சுந்தர்பிச்சையும் ஆன்லைன் மூலம் பேசினர். அப்பொழுது பேசிய சுந்தர்பிச்சை, இந்தியாவின் டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்காகவும், கிராமங்களில் உள்ள விவசாயப் பெருமக்களை இணையம் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திலும், தற்பொழுது கூகுள் நிறுவனம் 75,000 கோடியினை முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தப் பணத்தில் இருந்து, புதிய தொழில்நுட்பம் மற்றும் கருவிகளை, உள்ளூர் மொழிகளுக்கு ஏற்றவாறு வசதிகளை செய்து தர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய மோடி, கூகுள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகியான சுந்தர் பிச்சையுடன் பேசியது மகிழ்ச்சி அளிக்கின்றது எனவும், இது மிகவும் பயனுள்ள உரையாடலாக அமைந்தது எனவும் குறிப்பிட்டார்.

HOT NEWS