மோடியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்! போலீஸ் அதிகாரி ராஜினாமா!

13 July 2020 அரசியல்
sunithayadav.jpg

ஊரடங்கு நேரத்தில், மோடியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன் என்றுக் கூறியப் போலீஸ் அதிகாரி சுனிதா ராஜினாமா செய்திருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. இவருடைய மகன் பிரகாஷ் கனானி. இவருடைய நண்பர்கள் இரவு நேரத்தில், ஊரடங்கு சமயத்தில் சுற்றித் திரிந்துள்ளனர். அவர்களை பார்த்த சூரத் போலீஸ் அதிகாரி சுனிதா தடுத்து நிறுத்தியுள்ளார். இதனை அறிந்த அவருடைய மகன், சுனிதாவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். உன்னை 365 நாட்களும் இதே இடத்தில் நான் நிற்க வைத்து விடுவேன் என அமைச்சர் மகன் மிரட்டி உள்ளார்.

அப்பொழுது, அவர் செய்த வாக்குவாதமானது வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டது. அப்பொழுது சுனிதா யாதவ் பேசுகையில், இந்த ஊரடங்கு சமயத்தில் உங்களுக்கு வெளியில் சுற்றும் அதிகாரம் யார் கொடுத்தது? இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியாக இருந்தாலும், நான் தடுத்து நிறுத்துவேன் என்றுக் கூறியுள்ளார். இது தற்பொழுது சமூக வலைதளங்களில் பரபரப்பாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, போலீஸிடம் சிக்கிய அவர்கள் மீது, ஐபிசி 188, 269 மற்றும் 270 ஆகியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சுனிதா யாதவ் தலைமைக் காவல்நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் தற்பொழுது தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் பரவியுள்ளன.

HOT NEWS