நான் அம்மனாகவும் நடிப்பேன், அம்மணமாகவும் நடிப்பேன், அதையெல்லாம் நீங்கள் ஜஸ்ட் லைக் தேட் நீங்கள் கண்டுக் கொள்ளக் கூடாது என ரம்யா கிருஷ்ணன் கூறும், இந்த ஒரு டையலாக்கில் இருந்தே, இப்படத்தின் கதையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
கல்லூரி காதலனுடன் கள்ளத்தனமாக, உறவு வைத்துக் கொள்ளும் பெண், அவள் செய்யும் கொலையிலிருந்த அவளைக் காப்பாற்றத் துடிக்கும் கணவன், என சமந்தா மற்றும் பகத் பாசில் மிரட்டுகின்றனர்.
நடிகையாக படத்தில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன், சில கொச்சையான வசனங்களால், நம்மை முகம் சுலிக்க வைக்கிறார். ஒரு பெண்ணுக்குக் கணவனாக, ஒரு பிள்ளைக்குத் தந்தையாக, வரும் விஜய் சேதுபதி, ஹார்மோன் கோளாறால் திருநங்கையாக மாறி நிற்கும் பொழுது, சமூகத்தைப் பற்றி கவலைப்படாமல், நீ என்னுடன் மட்டும் தான் வாழ வேண்டும் என்று கூறும் பொழுது, தியேட்டரே விசில் அடித்து, கொண்டாடுகிறது.
நான்கு பேர், நான்கு விதமாக செல்லும் கதை. அனைத்திற்கும் ஒரு விஷயமே மையப் புள்ளியாக உள்ளது அது தான் செக்ஸ். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக, அதுப் பிரச்சனையாக உள்ளது. இப்படிப்பட்ட கதையை எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல், திரைக்குக் கொண்டு வந்ததே மிகப் பெரிய விஷயம்.
ஏ சான்றிதழ் படமாக இருக்கும் என்பதால், படத்தினை குழந்தைகள் பார்க்கும் என்பதை பற்றிக் கவலைப்படாமல் எடுத்துள்ளனர்.
இது ஒரு வகையில் கலாச்சார சீர்கேடு என்றாலும், மற்றொரு வகையில் விஜய் சேதுபதியின் கதை நம்மை கலங்க வைக்கிறது.
விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம். இதுவரை யாரும் சொல்லாத ஒன்று.
சமந்தா மற்றும் பகத் பாசிலின் நடிப்பை, கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.
ரம்யா கிருஷ்ணனின் தைரியத்தை, நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும். இப்படிப்பட்ட கதாப்பாத்திரம் சர்ச்சையான ஒன்று.
பின்னணி இசை கச்சிதமாக பொருந்தியுள்ளது.
எதிர்பாராத திரைக்கதை என்பதால், அடுத்து என்ன நடக்கும் என்பதை, யாராலும் கணிக்க முடியாத ஒன்றாகும்.
படத்திலுள்ள சொதப்பலான விஷயங்கள்!
இது ஒரு ஏ படம் என்பதால், குழந்தைகள் பார்க்க முடியாது ஒன்றாகும்.
வக்கிரமான கதையை, கொடூரமாக எடுத்துள்ளனர்.
ரம்யா கிருஷ்ணனின் நிர்வாணப் படத்தை, அவருடையப் பிள்ளைகளேப் பார்க்கும் சீன், கண்டிப்பாக கட் செய்யப்பட வேண்டிய ஒன்று.