ஹாலிவுட் உலகளவில் பிரபலமடையக் காரணமாய் இருந்தவை, இந்த சூப்பர் ஹீரோ திரைப்படங்களே. பல பிரமாண்ட சூப்பர் ஹீரோக்கள் படங்கள் வந்திருந்தாலும், நமக்குப் பிடித்தவை என்றுப் பார்த்தால் அதில் ஒரு சிலப் படங்களே! சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன் போன்று பல 'மேன்' படங்கள் வந்திருந்தாலும் அனைவரையும் அசால்ட்டாக தூக்கி சாப்பிட்டு விட்டது இவ்வருடம் வெளிவந்த 'வொன்டர் வுமன்'.
1.வொன்டர் வுமன்கால் கேடாட் "வொன்டர் வுமனா"க நடித்து வெளி வந்த இத்திரைப்படம் இந்த ஆண்டின் NO.1 படமாக நிற்கிறது. முற்றிலும் புதுமையான முறை, புதிய திரைக்கதை, நடிகைக்கு முக்கியத்துவமான கேரக்டர், என அனைத்திலும் புதுமையைப் புகுத்தியதே இதன் வெற்றிக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதன் அடுத்தப் பாகம் எடுக்கும் பணிகள் மிகத் தீவிரமாக விவாதத்தில் உள்ளது.
ஐயர்ன் மேன்மார்வெல் பிக்சர்ஸ்சைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் இப்படம் மூன்றுப் பாகங்களாக மட்டுமின்றி அவென்சர்ஸ் {1,2}, கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர் மேன் என அனைத்து மார்வெல் படங்களிலும் ஐயர்ன் மேன் கதாபாத்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இதில் நடித்த ராபர்ட் டூனி ஜீனியர்க்கு மற்றப் படங்கள் இதன் அளவிற்கு வெற்றியைத் தரவில்லை என்றேக் கூற வேண்டும்.
சூசைட் ஸ்குவாட்DC பிக்சர்ஸ் வெளியிட்ட இத்திரைப்படம், உலகளவில் கல்லா கட்டியது மட்டுமின்றி பல மொழிகளில் ரிலீசானது. வில் ஸ்மித் நடித்திருக்கும் இத்திரைப்படம், ஜோக்கர் கேரக்டருக்கு மிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
சூப்பர் மேன்இதில் பலப் பாகங்கள் வெளி வந்திருக்கின்றன. ஒரே கதைதான், வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்தவர் எப்படி பூமியில் உள்ள மக்களைக் காப்பாற்றுகிறார் என்பதே இதன் கதை. எனினும் எந்த சூப்பர் மேன் படமும் பிளாப் ஆகவில்லை. அதில் கடைசியாக வெளிவந்த "சூப்பர் மேன் தி மேன் ஆப் ஸ்டீல்" மிகப் பெரிய வெற்றியை மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் வெலுத்து வாங்கியது.
தி பேட்மேன் டார்க் நைட்சூப்பர் மேன் வந்தாச்சு! அப்ப கண்டிப்பா பேட் மேன் வந்தாகனுமே. ஆமாம் பல பேட்மேன் படங்கள் இதுவரை வெளி வந்திருக்கின்றன. அதில் கிறிஸ்டியன் பேல் நடித்த "தி பேட்மேன் டார்க் நைட்" திரைப்படமே இன்று வரை சிறந்த பேட்மேன் திரைப்படமாக கருதப்படுகிறது. இதில் உள்ள ஜோக்கர் கதாப்பாத்திரத்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. சொல்லப்போனால், பேட் மேனுக்குள்ள இரசிகர்களை விட ஜோக்கருக்கே இவ்வுலகில் இரசிகர்கள் அதிகம்.
இதில் இன்று வரை பல பாகங்கள் வெளி வந்துள்ளன. எனினும், அனைத்துமே தொடர்கதை என்பதால், நம்மால் எதையும் பிரித்துப் பார்க்க இயலாது. இது மார்வெல் பிக்ஸர்ஸின் மிகப் பிரமாண்டமான படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பைடர் மேன்சிலந்திப் பூச்சி கடித்ததால் மிகவும் பலசாலியான ஒரு சாதாரண இளைஞனைப் பற்றியப் படம் தான் இந்த ஸ்பைடர் மேன். இவர் செய்யும் சாகசங்கள், காதல், மற்றும் நகைச்சுவையே இதன் வெற்றிக்கும் உலகளாவிய இரசிகர் படைக்கும் காரணம் ஆகும்.
அவெஞ்சர்ஸ்-2அவெஞ்சர்ஸ் வரிசையில் 2-வது பாகமான இதில் இதுவரை உருவாக்கப்பட்ட அனைத்து மார்வெல் சூப்பர் ஹீரோக்களும் நடித்திருந்தனர். இதன் வெற்றியைப் பற்றியும், படத்தைப் பற்றியும் நாம் கூற வேண்டிய அவசியமில்லை எனுமளவிற்கு இது மிகப் பிரபலமானது.
த இன்கிரெடிபல் ஹல்க்பச்சை நிறத்தில் ஒரு அரக்கனைப் போல கொடூரமாக காட்சியளிப்பவரே இதன் கதாநாயகன். அறிவியல் ஆராய்ச்சியின் விளைவாக, ஒரு சாதாரண மனிதன் அசாதரண சக்தியைப் பெறுகிறான். கோபம் வரும் பொழுது தன்னை மறந்து பச்சை நிற அரக்கனாக மாறி எதிரிகளை துவம்சம் செய்கிறதை சுவாரசியமாக இப்படத்தில் கூறுகின்றனர்.
எக்ஸ்-மேன்இதில் கிட்டத்தட்ட பத்து பாகங்கள் வெளி வந்திருந்தாலும் "ஹீயூ ஜாக்மேன்" நடித்த பாகங்கள் உலகப் புகழ் பெற்றவை. இதில் பல சக்தி வாய்ந்த மியூட்டன்ட்களுக்கும், மனிதர்களுக்கும் இடையே நிகழும் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தின் கடைசி பாகம் இவ்வருடம் ரிலீசானது.