சனிக்கிழமை அன்று, தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில், அருண் விஜய், இயக்குநர் ஷங்கர், நடிகர் ராகவா லாரன்ஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அப்பொழுது மேடையில் பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நான் ரசிகர்களினை நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன் என்றார். அரசியல் ரீதியாக ஆளும் அரசை நாம் விமர்சித்தாலும், நேரு உள்விளையாட்டு அரங்கத்தினை நமக்காக அளித்துள்ளனர். அவர்களுக்கு, என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நான் சென்னைக்கு ரயிலில் வந்தேன். அப்பொழுது, டிக்கெட்டினை தவற விட்டுவிட்டேன். அப்பொழுது டிடிஆர் என்னை பிடித்துக் கொண்டு பைன் கட்டச் சொன்னார். ஆனால், நான் கட்டமாட்டோன். டிக்கெட் எடுத்துத் தான் வந்தேன். எப்படியோ டிக்கெட்டினைத் தொலைத்துவிட்டேன் எனக் கூறினேன். அப்பொழுது, அங்கிருந்து போர்ட்டர்கள் எனக்காக வந்தனர். அவர்கள் தங்களிடம் உள்ள பணத்தைப் புரட்டி அந்தப் பையனின் முகத்தைப் பாருங்கள். அவன் பொய் சொல்லவில்லை எனக் கூறினார்கள். அவர்கள் எனக்காக பைன் கட்ட முன் வந்தனர்.
அப்பொழுது நான், என்னிடம் பணம் உள்ளது என்று கூறி, பணத்தை எடுத்துக் காட்டினேன். பின்னர், டிடிஆர்ரிடம் நான் கையில் பணம் வைத்துள்ளேன். பிறகு எதற்கு நான், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யப் போகிறேன் என்றேன். என்னைப் பார்த்த டிடிஆர் இப்பொழுது உன்னை நம்புகின்றேன் என்றார். இதனைக் கூறிவிட்டு, நம்பிக்கை தான் நம்மை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்கின்றது. வெற்றி அடைவதற்கு, திறமை, சாணக்கியத் தனம், புத்திசாலித்தனம், உழைப்பு ஆகியவை வெறும் 10% மட்டுமே உதவும். மீதியுள்ள 90% காலம், நேரம், இயற்கை, சூழ்நிலை, சந்தர்ப்பம் ஆகியவையே வெற்றியைத் தீர்மானிக்கின்றன என்றார்.