ரஜினிகாந்தின் ரசிகர்கள் உலகம் முழுக்க உள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே! அவரும் தன்னுடைய ரசிகர்களை என்றும் விட்டுக் கொடுத்ததில்லை. அவர் தற்பொழுது செய்துள்ள நிகழ்ச்சியால், அனைத்து ரஜினி ரசிகர்களுமே நெகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் ராகவா விக்னேஷ்-ஜெகதீஸ்வரி. இவர்கள் இருவருமே, தீவிரமான ரஜினி ரசிகர்கள்.
கர்ப்பிணியான ஜெகதீஸ்வரியிடம் உனக்கு என்ன ஆசை எனக் கேட்டுள்ளார் விக்னேஷ். அதற்கு, நான் சூப்பர் ஸ்டாருடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார் ஜெகதீஸ்வரி.
இதனைத் தொடர்ந்து, தன்னுடைய மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பல மாதங்களாக ரஜினிகாந்தினை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், ரஜினிகாந்த் தொடர்ந்து பிஸியாகவே இருந்து வந்ததால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனிடைய, ரஜினிகாந்தின் உதவியாளர் மூலம் இந்த தகவல் ரஜினிக்கு தெரிய வந்துள்ளது.
விஷயத்தைக் கேள்விப்பட்டதும் உடனடியாக, சூட்டிங் நடைபெறும் இடத்திற்கு அழைத்துள்ளார். ராகா விக்னேஷூம், அவருடைய மனைவி ஜெகதீஸ்வரியும் சூட்டிங் நடைபெறும் இடத்திற்குச் சென்றுள்ளனர்.
அங்கு அவர்களுடன் சகஜமாகப் பேசிய ரஜினிகாந்த், ஜெகதீஸ்வரிக்கு கையில் வளையல் அணிவித்து மகிழ்வித்தார். இதனால், இருவரும் கண்கலங்கி விட்டனர். இதனை, தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.