நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, இமயமலைக்குச் சென்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார்.
கடந்த 13ம் தேதி, இமயமலைக்கு பயணம் மேற்கொண்டார் ரஜினிகாந்த். அவர், இமய மலைக்குச் செல்லும் பொழுது, ரிஷிகேஷ், கேதர்நாத் மற்றும் பத்திரிநாத்தில் உள்ள கோவில்களில் வழிபாடு மேற்கொண்டார். மேலும், தியானம் முதலானவைகளையும் வர் மேற்கொண்டார்.
10 முதல் 15 நாட்கள் இந்தப் பயணம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவே தமிழகம் திரும்பினார். அப்பொழுது, செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், பயணம் சிறப்பாக இருந்ததாக தெரிவித்தார்.
தர்பார் படத்தின் சூட்டிங் முடிந்த கையோடு இமயமலை சென்ற அவர், தற்பொழுது தர்பார் படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட உள்ளார் என, சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.