உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை! டாஸ்மாக் ஓப்பன்?

15 May 2020 அரசியல்
supremecout.jpg

உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு தடை விதித்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

தமிழகத்தில் மே மாதத் தொடக்கத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க, தமிழக அரசு அனுமதித்தது. இதற்குப் பலரும் தங்களுடையக் கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில், மக்கள் நீதிமய்யம் சார்பில் டாஸ்மாக் கடைகளை மூட, வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கின் பொழுது, டாஸ்மாக் கடைகளில், சமூக இடைவெளியானது பின்பற்றப்படவில்லை எனவும், அதற்கான ஆதரங்களும் சமர்பிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது தமிழக அரசு. அந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற விசாரணையின் பொழுது, தமிழகத்தின் வருவாயானது, டாஸ்மாக்கினை மூடியுள்ளதால், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், எனவே டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், உயர்நீதிமன்றம் விதித்த தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம், செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு கமல்ஹாசன் கடுமையான வருத்தத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள கமல், உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது. எனத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS