சபரிமலை விவகாரம்! பெரிய அமர்வுக்கு வழக்கு மாற்றம்!

15 November 2019 அரசியல்
supremecout.jpg

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்து வழக்கானது, தனி அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என, நீதிமன்றம் தீர்ப்பளித்ததை பல எதிர்ப்புகள் பிரச்சனைகள் எழ ஆரம்பித்தன. சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமியினை தென் இந்திய மக்கள், மிகவும் பக்தியுடன் வழிபட்டு வருகின்றனர். அந்தக் கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி கிடையாது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், வழக்குகள் தொடரப்பட்டன. அதற்கு ஏற்கனவே தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க எவ்விதத் தடையும் இல்லை என்றது. இதனால், இந்து ஆர்வலர்களும், ஐயப்ப பக்தர்களும் கடுமையாக எதிர்த்தனர்.

ஒரு சில பெண்கள் மட்டுமே தற்பொழுது வரை, பலத்தப் பாதுகாப்புடன் சென்று ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். இவ்வளவு ஏன், பலப் பெண்களே இந்த தீர்ப்பினை எதிர்த்தனர். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவானது தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதற்கு நேற்றுத் தீர்ப்பளித்த நீதிமன்றம், சமூகத்தில் பெண்களுக்கு அனைத்து நிலைகளிலும், சம உரிமை உள்ளது. இருப்பினும், இது மதம் மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயமாகும். அனைத்து மதங்களிலும் இது பின்பற்றப்படுகின்றது.

முந்தையத் தீர்ப்பிற்கு தடையில்லை. தற்பொழுது, அனைத்து வயதுப் பெண்களுமே இந்த கோவிலுக்குச் செல்லாம். மேலும், இந்த வழக்கினை 7 பேர் கொண்ட குழுவிற்கு பரிந்துரை செய்ய, 5 நீதிபதிகளில் மூன்று பேர் பரிந்துரை செய்தனர். இதனையடுத்து, இந்த வழக்கினை பெரிய அமர்விற்கு மாற்றுவதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

HOT NEWS