எட்டு வழிச்சாலை அமைக்க தமிழக அரசு விதித்த தடையினை, உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. சாலை அமைக்க அனுமதி வழங்கி உள்ளது.
தமிழகத்தின் சென்னை முதல் சேலம் வரையில் எட்டு வழிச்சாலை அமைக்கும் தமிழகன் அரசின் அறிவிப்பினை, தமிழக உயர்நீதிமன்றம் ரத்து செய்து கடந்த ஏப்ரல் 8ம் தேதி அன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவினை எதிர்த்து, தேசிய நெடுஞ்சாலைத்துறையானது, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கினை விசாரித்து வந்த நீதிபகள், இன்று இதற்குரிய தீர்ப்பினை வழங்கி உள்ளனர்.
அதன்படி, புதிய அறிவிக்கைகளை வெளியிட்டு, தமிழக அரசு நிலங்களை மீண்டும் கையகப்படுத்தலாம் என்றுக் கூறியுள்ளது. மேலும், உயர்நீதிமன்றம் விதித்த தடையினையும் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, நில உரிமையாளர்களின் மேல்முறையீட்டு மனுக்களையும் ரத்து செய்து உத்தரடவிட்டனர்.