இரண்டாம் மற்றும் 3ம் ஆண்டு பருவத் தேர்வுகளை, பல்கலைக் கழகங்கள் விருப்பப்பட்டால் வைத்த்துக் கொள்ளலாம் என்று, உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
இந்தியா முழுக்க கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும் பருவத் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்து வந்தன. இந்த சூழ்நிலையில், தமிழக அரசு, இறுதி ஆண்டு பருவத் தேர்வினைத் தவிர்த்து, மற்றத் தேர்வுகளுக்கு பணம் கட்டியிருந்தால், பாஸ் என்று அறிவித்தது. அதுமட்டுமின்றி, அரியர்ஸ் தேர்வுகளுக்கும் பணம் கட்டியிருந்தால் பாஸ் என்றுக் கூறியுள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் சங்கம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், பல்கலைக் கழகங்கள் விரும்பினால், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளை வைத்துக் கொள்ளலாம் என்றுக் கூறியுள்ளது. இதனால், வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்குள் தேர்வு நடத்த யூஜிசி கூறியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.