தள்ளி வைக்கப்பட்ட கடன் தவணைக்கு கூடுதல் வட்டியா? தள்ளுபடி செய்ய முடியுமா என கேள்வி!

12 June 2020 அரசியல்
supremecout.jpg

ஊரடங்கு காலத்தில் தள்ளி வைக்கப்பட்ட கடன்களின் தவணைக்கு கூடுதல் வட்டி விதிக்கப்படுவது கவலை அளிக்கின்றது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, கடந்த மார்ச் 25ம் தேதி முதல், ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், அடுத்த ஆறு மாதங்களுக்கு கடன்கள், வட்டி மற்றும் தவணைகள் முதலியவைகளைக் கட்ட வேண்டாம் எனவும், அவைகளைப் பின்னர் வருகின்ற மாதங்களில் கட்டிக் கொள்ளலாம் எனவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது எனவும் கூறியது ஆர்பிஐ.

இதனை முன்னிட்டு, வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கடன் மற்றும் தவணைத் தொகையினை வசூலிக்காமல் நிதி நிறுவனங்கள் இருந்து வருகின்றன. இந்த சூழலில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது.

அதனை விசாரித்த நீதிபதிகள், கடன்களுக்கான வட்டி மற்றும் தவணைகளுக்கு கூடுதல் வட்டி விதிப்பது கவலை அளிப்பதாக தெரிவித்தனர். ஊரடங்கு காலத்தில் கட்டாத வட்டிக்கு இப்படி வட்டி கணக்கிடுவதை தங்களால் தடுக்க இயலாது என, வங்கிகளின் வழக்கறிஞர் கூறினார். இவ்வாறு வட்டி கணக்கிடப்படுகின்றதா எனவும் கேள்வி கேட்டுள்ளனர்.

இந்த வழக்கினை வருகின்ற 17ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், நிதியமைச்சகமும், ஆர்பிஐயும் இணைந்து இம்மாதிரியான வட்டி விதிப்பது குறித்து விவாதித்து பதிலளிக்க வேண்டும் என்றுக் கூறியுள்ளனர்.

HOT NEWS