தேர்தலில் போட்டியிடும் குற்றவாளிகள் பற்றி இணையத்தில் வெளியிடுங்கள்! உச்சநீதிமன்றம் கட்டளை!

14 February 2020 அரசியல்
supremecourt.jpg

அரசியல் கட்சிகள் அனைத்தும், தங்களுடைய வேட்பாளர்களின் குற்றச் செயல்களை, அவரவர் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என, உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பாஜகவின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்திருந்தார். அதில், குற்றவாளிகள் மற்றும் குற்றப் பிண்ணனி தொடர்புடையவர்கள், தங்களுடையத் தகவல்களை செய்தித்தாள்கள், நாளேடுகள், மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிட வேண்டும் எனக் கூறினார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுடையக் குற்றப்பிண்ணனி குறித்த தகவல்கள், நாளேடுகள், செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிட வேண்டும் எனக் கூறியது.

இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை தேர்தல் ஆணையம் தெளிவுபட செயல்படுத்தவில்லை. இதனையடுத்து, அஸ்வினி வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார். அதில், தேர்தல் ஆணையம், இந்த விஷயத்தில் அக்கறை இல்லாமல் உள்ளது. எத்தனை நாட்களுக்குள் விளம்பரத்தினை வெளியிட வேண்டும், எப்படி வெளியிட வேண்டும் உட்பட, எவ்வித வழிகாட்டுதல்களையும் தேர்தல் ஆணையம் செய்யவில்லை எனக் கூறினார்.

தேர்தல்லகளில் போட்டியிடும் நபர்கள், அவர்களுடையத் தகவல்களை தத்தம் கட்சிகளின் இணையதளங்களில் வெளியிட வேண்டும். எந்த வகையானக் குற்றத்திற்காக, அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது, வழக்கில் குற்றப்பத்திரிக்கை (எப்ஐஆர்) தாக்கல் செய்யப்பட்டு உள்ளதா, இல்லையா என்பது உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் வெளியிட வேண்டும். மேலும், இவ்வாறு இணையத்தில் வெளியிட்ட 72 மணி நேரத்திற்குள், செய்தித்தாள்கள், நாளேடுகள், டிவி சேனல்களில் விவரங்களை வெளியிட வேண்டும்.

வெளியிட்டதற்கான சான்றுகளை, தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்பிக்கப்பட்ட சான்றுகளை, தேர்தல் ஆணையமானது நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லும் எனத் தீர்ப்பளித்துள்ளது. இதனால், பல குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவது குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS