தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் பிழைகள் உள்ளதாக, அதனை நிராகரித்து உள்ளது உச்சநீதிமன்றம்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு, கடந்த வாரம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால், சமூக இடைவெளி என்பது கேள்விக் குறியாகி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மூலம் முதல் நாள் 172 கோடி ரூபாயும், இரண்டாவது நாள் 150 கோடி ரூபாயும் வருமானம் ஈட்டப்பட்டது.
தங்கள் பகுதியில் விற்கப்பட்ட டாஸ்மாக் மதுவினை வாங்குவதற்கு, வரிசையில் முந்தியடித்துக் கொண்டு மதுபிரியர்கள் வந்து நின்றனர். இது குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதங்களில் வெளியாகின. இது குறித்து, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வழக்குத் தொடர்ந்தது. அதில், டாஸ்மாக் கடைகளை மே-17ம் தேதி வரைத் திறக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இது குறித்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதில், தமிழகத்தின் வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் கூறி, தன்னுடைய மனுவில் தெரிவித்து இருந்தது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, சரியாக அந்த மனுவானது இல்லை எனவும், தவறுகள் இருப்பதாகவும் கூறி, அந்த மனுவினைத் தள்ளுபடி செய்துள்ளது.