பத்மநாபசாமி கோயில் வழக்கு! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

13 July 2020 அரசியல்
supremecourt.jpg

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் மீது, திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தினைச் சேர்ந்தவர்களுக்கு உரிமை உண்டு என, உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை வழங்கி உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு, திருவனந்தபுரம் அனந்தபத்மநாபசாமி திருக்கோயிலானது, கேரள அரசே ஏற்று நடத்த வேண்டும என, கேரள மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவிதாங்கூர் அரச குடும்பத்தினைச் சேர்ந்த மார்த்தாண்டவர்மன் என்பவர், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கினை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை நிறுத்தி வைத்தது.

இதனிடையே, இன்று இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது. அப்பொழுது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமிக் கோயில் மீது, திருவிதாங்கூர் அரசக் குடும்பத்திற்கு முழு உரிமை உள்ளது எனத் தீர்ப்பளித்தது. மேலும், கோயில் நிர்வாகங்களை நிர்வகிப்பதற்காக, திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில், ஒரு குழுவானது அமைக்கப்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளது.

HOT NEWS