இந்த ஆண்டு ஓபிசி மாணவர்களுக்கு எவ்வித இட ஒதுக்கீடும் கிடையாது என, உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் வாயிலாக, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15 சதவிகித இடங்களும், மேற்படிப்புக் கல்லூரிகளிலும் உள்ள 50 சதவிகித இடங்களும் நிரப்பப்பட்டு வருகின்றன. அதே போல், பிற மாநிலங்களும் அவ்வாறு வழங்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில், அந்த இடங்களில் 50% ஓபிசி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, அதிமுக, திமுக, பாமக, மதிமுக ஆகியக் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
இந்த வழக்கின் விசாரணையானது, நீதிபதி நாகேஷ்வர ராவ் தலைமையில் நடைபெற்றது. பலக் கட்டங்களாக நடைபெற்ற இந்த விசாரணையின் தீர்ப்பானது, இன்று வெளியானது. இட ஒதுக்கீட்டினை வழங்க முடியுமா என, மத்திய அரசிடம் விளக்கம் கேட்டனர் நீதிபதிகள். அதற்கு, இந்த ஆண்டு ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டினை வழங்க முடியாது என கூறியது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஓபிசிக்கான 50% இட ஒதுக்கீடானது வழங்கப்படாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.