பாஜக பதவியேற்றது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டாக தொடர்ந்த வழக்கில், ரகசிய வாக்கெடுப்பு முறையில், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது எனவும், வெளிப்படையான நம்பிக்கை வாக்கெடுப்பே நடத்த வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளது. மேலும், நாளை நடைபெறும் வாக்கெடுப்பினை, தூர்தர்ஷன் டிவியில் நேரலையாக ஒளிபரப்புச் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பினைத் தொடர்ந்து, நாளை மாலை 5 மணிக்கு, வெற்றிப் பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் எம்எல்ஏக்களாகப் பதவியேற்க வேண்டும் எனவும் அதன் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அடுத்த 30 மணி நேரத்திற்குள் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பினை நடத்தி முடிக்க வேண்டும் என, அதன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து, கருத்துத் தெரிவித்துள்ள சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத், எங்களுக்கு 30 மணி நேரம் தேவையில்லை. 30 நிமிடம் போதும் எனக் கூறியுள்ளார்.