இந்தியாவின் நிலைமை கவலை அளிக்கின்றது! உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே வருத்தம்!

09 January 2020 அரசியல்
supremecourt.jpg

இந்தியாவின் நிலைமை கவலை அளிப்பதாக, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் குடியுரிமை திருத்தத் சட்டத்திற்கு எதிராக, பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் எனப் பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவினை விசாரித்த நீதிமன்றம், இந்தியாவில் இப்பொழுது இருக்கும் நிலைமை கவலை தருகின்றது. நாடு நெருக்கடி நிலையில் உள்ளது. நாட்டின் அமைதியை கொண்டு வரும் முயற்சிகள் வேண்டுமே தவிர, இது போன்ற மனுக்கள் அதற்கு உதவாது.

இவ்வாறான வழக்குகளை தொடருவதன் மூலம், நீங்கள் மேலும் நிலைமைய பதற்ற நிலைக்குக் கொண்டு செல்கின்றீர்கள் என, தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்தார். மேலும், உயர்நீதிமன்றங்கள் இது தொடர்பான வழக்குகள் உள்ளன. அவைகளை, உச்சநீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களே அந்த வழக்குகளை விசாரிக்கும். அதில் ஏதேனும் குழப்பம் நீடிக்கும் பட்சத்தில், உச்சநீதிமன்றம் தலையிட்டு அந்த வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கும் என கூறினார்.

HOT NEWS