வீடுகளுக்கு டோர் டெலிவரி குறித்து பரிசீலிக்கவும்! உச்சநீதிமன்றம் அதிரடி!

08 May 2020 அரசியல்
supremecourt.jpg

வீடுகளுக்கு மதுவினை டோர் டெலிவரி செய்வது குறித்து, மாநில அரசுகள் யோசிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதன் காரணமாக, வருகின்ற மே-17ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்பொழுது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மது விற்பனைக்க்கு, மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளன.

இதன் காரணமாக, சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், மேலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் வாய்ப்புகள் உள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கினை அசோக் பூஷண், கிஷன் கவுல், கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இது குறித்து நீதிபதிகள் பேசுகையில், இந்த விஷயத்தில் எங்களால் தடைகள் விதிக்கப்படாது எனவும், ஆனால் மாநில அரசுகள் வீடுகளுக்கு டெலிவரி செய்யவது குறித்து யோசிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விற்பனை உள்ளிட்டவைகளை பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளது.

ஏற்கனவே, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், சோமட்டோ, ஸ்விகி, அமேசான் புட்ஸ், ஊபர் ஈட்ஸ் உள்ளிட்டவைகள் மூலம், மதுவினை டெலிவரி செய்ய பல மாநிலங்கள் தற்பொழுது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

HOT NEWS